மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது..!

share on:
Classic

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில், கடந்த 2008-ஆம் ஆண்டில் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுகந்திரமாக செயல்பட்டு வருகிறார் என புகார் எழுந்தது. இதையடுத்து, ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் அளித்தன. இந்த நிலையில், ஹபீஸ் சயீத், பாகிஸ்தானின் லாகூர் நகரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan