ஐ.எஸ் அமைப்பால் இந்தியா, இலங்கைக்கு ஆபத்து..? உளவுத்துறை எச்சரிக்கை

share on:
Classic

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தங்கள் கவனத்தை இந்தியா மற்றும் இலங்கை மீது திருப்பியுள்ளதால், அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருக்க கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

கேரளாவின் உளவுத்துறை அமைப்புகள், அம்மாநிலத்தின் காவல்துறை உயரதிகாரிகளுக்கு 3 கடிதங்களை அனுப்பியுள்ளனர். அதில் ஒரு கடிதத்தில் “ ஈராக் மற்றும் சிரியா கைப்பற்றும் முயற்சியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தங்கள் அமைப்பினர் தங்கியுள்ள நாடுகளில் வன்முறை செயல்களில் ஈடுபடுமாறு கூறியுள்ளது “ என்ற தகவல் உள்ளது.

மற்றொரு எச்சரிகை கடிதத்தில் “ கொச்சியில் உள்ள முக்கியமான ஷாப்பிங் மால்கள் ஐஎஸ் அமைப்பின் இலக்குகளாக இருக்கலாம். மேலும் அந்த அமைப்பு தொடர்பான இணையதள செயல்பாடுகள், தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு, கேரளா, காஷ்மீர், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உளவுத்துறையின் உயரதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஐஎஸ் அமைப்பினர் அவர்களுக்குள் தொடர்புகொள்ள இதுவரை டெலிகிராம் (Te;legram) மெசஞ்சர் ஆப்பை பயன்படுத்தியதாகவும், ஆனால் அதிலிருந்து தகவல்கள் கசிவதால் மற்ற பாதுகாப்பு ஆப்களான செக்கியூர் சாட் (Secure Chat), சிக்னல் (Signal) மற்றும் சைலண்ட் டெக்ஸ்ட் (Signal Text) போன்ற ஆப்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மற்றொரு கடிதத்தில் உள்ளது. 

இதனைத்தொடர்ந்து கேரள கடற்பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

News Counter: 
100
Loading...

Ramya