பிரதமரின் மனைவி குறித்த கருத்து : மாயாவதி பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என பாஜக பதில்..

share on:
Classic

பிரதமரின் மனைவி குறித்து மாயாவதி தெரிவித்த கருத்துக்கு, அவர் பொது வாழ்க்கையில் நீடிக்க தகுதியற்றவர் என்று பாஜக தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து அம்மாநில முதல்வர் மம்தாவிடம் கேள்வி எழுப்பியுள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய மாயாவதியையும் அவர் விமர்சனம் செய்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் பல்வேறு  விவகாரங்கள் குறித்து கருத்துகளையும் அவர் பதிவிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் “ மாயாவதி பிரதமராக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அவரின் நிர்வாகமும், பேச்சுக்களும், நெறிமுறைகளும் தரம் தாழ்ந்து வருகின்றன. அவர் பிரதமரை தனிப்பட்ட முறையில் பேசுயதன் மூலம் பொதுவாழ்க்கைக்கு தகுயில்லாத நபராகி விட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்மா பானர்ஜியையும் அருண்ஜேட்லி விமர்சித்துள்ளார். அதில் அவர் “ மேற்குவங்கத்தில் ஜனநாயகம் பாதிக்குள்ளாகி உள்ளது. எதிர்க்கட்சியினர் கொல்லப்படுகின்றனர், வேட்பாளர்கள் தாக்கப்படுகின்றனர், வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படுகின்றனர். இது தான் எதிர்க்கட்சிகள் நாட்டிற்கு கொடுக்க விரும்புவது” என்று குறிப்பிட்டுள்ளார். 

அல்வர் பாலியல் வன்கொடுமை வழக்கில் மோடி அரசியல் செய்வதாக கூறிய மாயாவதி, தன் சொந்த மனைவியை கைவிட்டு வந்த மோடிக்கு எப்படி மற்ற பெண்கள் மீது மரியாதை இருக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Ramya