வைகோ மிஷன் ஸ்டார்ட்... அடுத்த குறி வித்யாசாகர் ராவ்?...

share on:
Classic

வைகோவை சந்தித்திருப்பதால் வித்யாசாகர் ராவின் ஆளுநர் பதவி பறிபோக வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.  

தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது மகாராஷ்டிராவின் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இவரை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துள்ளார். மும்பை தமிழ்ச்சங்கம் நடத்தும் விழாவில் கலந்துகொள்ள வைகோ சென்றபோதே இந்த திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், வைகோ-வின் அடுத்த குறி வித்யாசாகரை நோக்கி திரும்பி இருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை அள்ளித்தெளிக்கத் தொடங்கியுள்ளனர். வைகோ யாரை சந்திக்கின்றாரோ அந்த நபரின் வாழ்க்கை வெகு விரைவிலேயே தலைகீழாக மாறி விடும் என்ற ஓர் நம்பிக்கை நெட்டிசன்ஸிடம் உண்டு. அந்த வகையில், வித்யாசாகர் ராவின் ஆளுநர் பதவி நிலைக்குமோ? நிலைக்காதோ? என்ற அச்சம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக இணையவாசிகள் நையாண்டிக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக, வைகோவை சந்தித்ததால் தான் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் தமது பதவியை ராஜினாமா செய்ததாக நகைச்சுவையாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar