திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை...

share on:
Classic

திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சியினருடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று காலை திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன், மதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் துரைமுருகன் தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவும், முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி தலைமையிலான மதிமுக நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்.பி. கணேச மூர்த்தி, தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூக முடிந்துள்ளதாகவும், இருகட்சி தலைமைகளுடன் கலந்தாலோசித்த பிறகு 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்

News Counter: 
100
Loading...

sajeev