பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் மெக்கானிக்கல் என்ஜினியர் : ஒரு லிட்டர் ரூ.40-க்கு விற்று அசத்தல்..!!

share on:
Classic

பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும்  மெக்கானிக்கல் என்ஜினியர் ஒருவர், ஒரு லிட்டர் ஒன்றை ரூ. 40க்கும் விற்றும் வருகிறார். 

ஹைதராபாத்தை சேர்ந்த 45 வயதான மெக்கானிக்கல் என்ஜினியரான சதிஷ் குமார் என்பவர் அங்கு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் மூன்று - படி செயல்முறைகள் மூலம் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதன் மூலம் அதனை டீசலாகவும், விமான பொருளாகவும் மற்றும் பெட்ரோலாகவும் மாற்ற முடியும் என சதீஷ் குமார் கூறியுள்ளார். சுமார் 500 கிலோ மறுசுழற்சி செய்யாத பிளாஸ்டிக் மூலம் 400 லிட்டர் எரிபொருள் தயாரிக்க முடியும் என்று கூறியுள்ள அவர், இது மிக எளிமையான செயல்முறை என்றும் தெரிவித்துள்ளார். இந்த செயல்முறைக்கு தண்ணீர் தேவையில்லை என்று தெரிவித்த சதீஷ் இதன் மூலம் தண்ணீர் எதுவும் வெளியாகாது எனவும் கூறியுள்ளார். அதே போல் வாக்கமில் (Vaccum) நடைபெறும் இந்த முறையால் காற்று மாசுபடாது எனவும் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டிலிருந்து சதீஷ்குமார் 50 டன்கள் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றியுள்ளார். தற்போது அவரது நிறுவனம் 200 கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து தினசரி 200 லிட்டர் பெட்ரோலை தயாரித்து, லிட்டர் ஒன்றுக்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு ரூ 40 முதல் ரூ. 50-க்கு விற்பனை செய்தும் வருகின்றனர். இந்த தொழிற்சாலை உருவாக்கியதன் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழலை உதவி செய்வது தான் என்றும், வியாபார நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது அல்ல என்று பெருமிதம் தெரிவித்தார் சதீஷ். மேலும் மற்ற ஆர்வமுள்ள தொழில் முனைவோருடனும் தங்கள் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். 

News Counter: 
100
Loading...

Ramya