5மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிடமாற்றம்..!!

share on:
Classic

தமிழகத்தில் உள்ள 5 அரசு மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்களை பணியிட மாற்றம் செய்து சுகாதரத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் இதற்கான ஆணையை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சிவகங்கை மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்த முதல்வர் வனிதா, இனி மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வராகவும், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வராக இருந்த சாரதா, திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பெரம்பலூர் மருத்துவ கல்லூரியின் முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலராக செயல்பட்டு வந்த மீனாட்சி இனி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கும், தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்த முதல்வர் வசந்தி தற்போது பெரம்பலூர் மருத்துவ கல்லூரியின் முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind