ஜூன் 26-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு..!

share on:
Classic

நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் 26-ஆம் தேதி தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, வரும் ஜூன் மாதம் 5-ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதையடுத்து, ஜூன் 6-ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான 3,000 இடங்களும், 15 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டுக்காக ஆயிரத்து 207 இடங்களும் உள்ளன. மேலும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 45 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.tn.health.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் மாதம் 26-ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே, புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூன் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan