பதநீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா..!!

share on:
Classic

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது குறிப்பாக வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே கிடைக்கிறது.

செயற்கை முறையில் தயாரித்து கடைகளில் விற்கப்படும் குளிர்பாங்களை விட, இயற்கையாக பனைமரத்திலிருந்து கிடைக்கும் இந்த பதநீரில் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் ஏராளம் உண்டு. உடலுக்கு குளுர்ச்சி அளிக்கும் என்பதால், இந்த பானம் கோடைக் காளங்களில் பலராலும் விரும்பி பருகப்படுகிறது.

1 கிளாஸ் (250 மி.லி) பதநீரில் இவ்வளவு சத்துக்களா?
சக்கரை (Sugar) : 28.8 கிராம்
காரம் (Alkaline) : 7 கிராம்
சுண்ணாம்பு சத்து (Calcium) : 35.4 மி.கிராம்
இரும்பு சத்து (Iron) : 5.5 மி.கிராம் 
பாசுபரசு (phosphorus) : 32.4 மி.கிராம்
தயமின் (thymine) : 82.3 மி.கிராம்
ரிபோபிலவின் (riboflavin) : 44.5 மி.கிராம்
அசுகர்பிக் அமிலம் (ascorbic acid) : 12.2 மி.கிராம்
நிகோடினிக் அமிலம் (nicotinic acid) : 674.1 மி.கிராம்
புரதம் (protein) : 49.7 மி.கிராம்
கலோரிகள் (Calories) : 113.3 மி.கிராம்

மருத்துவ குணங்களும், பயன்பாட்டு முறையும் :
இரத்தக் கடுப்பிலிருந்து விடுபட, 50 கிராம் வெந்தயத்தை எடுத்து லேசாக வறுத்து, பொடி செய்து, காலை, மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர வேண்டும். மேலும், மூல சூடு தணியும்.

மஞ்சளை அரைத்து பொடி செய்து, காலையில் இறக்கிய பதநீரில் 50 மில்லி எடுத்து, அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை கலக்கி உட்கொண்டால், வயிற்று புண், தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை நீங்கும்.

கோடை காலத்தில் சுத்தமான பதநீர் குடித்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள பித்தத்தைக் குறைத்து, இரத்த சோகையையும் விரட்டும் தன்மை கொண்டது.

இந்த காலத்தில் பெண்கள் பலரும், மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி, வாய்வு, கட்டி முதலியவற்றினால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பனை குருத்தின் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும். அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான ஜன்னி நோய்போல உண்டாகும் ஒருவித நோய்க்கும் பதநீர் சிற்ந்த மருந்தாகிறது.

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி, பனை ஓலைப்பாயில் படுத்து, பனை விசிரியியை பயன்படுத்தி, பனை ஓலையில் உணவு உண்டு பனை ஓலை குடுசையில் 96 நாள்கள் தங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என சித்தர்களின் மருத்துவக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பிள்ளை பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது. மேலும், இந்த பானத்தில், இயல்பாகவே அனைத்து சத்துக்களும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவக்குறிப்புக்கல் சித்த மருத்துவத்தில் காண முடிகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan