அவர்களுக்கு முடிவு கட்டவே கூட்டம்.. சீறும் ஸ்டாலின்..!

share on:
Classic

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முடிவு கட்டவே திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களை வெல்வோம் என்ற முழக்கத்தை முன்வைத்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீகம்பட்டியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களுக்கிடையே உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முடிவு கட்டவே திமுக கிராம சபை கூட்டங்களை நடத்துவதாகவும் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind