அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 17-ஆம் தேதி அறிவிப்பு...

share on:
Classic

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் மற்றும் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், வரும் 17-ஆம் தேதி அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினமே அதிமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan