'ஹன்சிகா'வை அடுத்து 'மேகா ஆகாஷு'க்கு நேர்ந்த சோகம்

share on:
Classic

தனுஷின் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் 'மேகா ஆகாஷ்'. அந்த படம் இன்னும் வெளிவராத நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்தில் ஒரு சிறிய ரோலில் தலை காட்டினார். தற்போது ரிலீஸாகியிருக்கும் சிம்புவின் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். 

மேகா ஆகாஷ் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கணக்கு வைத்துள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரை பலர் பின் தொடருகின்றனர். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹாக்கர்களால் 'ஹாக்' செய்யப்பட்டுள்ளது. அவரது பெயரை நீக்கிய ஹாக்கர்கள் 'டீஜே டம்ளா' என்ற பெயரில் மேகாவின் போட்டோக்களையும் நீக்கி வேறு போட்டோக்களை பதிவேற்றியுள்ளனர். 

இதுபற்றி கூறிய அவர் " எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹாக் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ஏதாவது பதிவுகளோ, மெசேஜ்களோ வந்தால் கண்டுகொள்ள வேண்டாம். எனது குழு அந்த பக்கத்தை மீட்க வேலை செய்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார். சமீபத்தில் கூட 'ஹன்சிகா'வின் போன் மற்றும் டுவிட்டர் அக்கவுண்ட் ஹாக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

News Counter: 
100
Loading...

youtube