’மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட படக்குழு..!!

share on:
Classic

மெஹந்தி சர்க்கஸ் படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் சிந்திப்பின் போது இந்த படத்தின் அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். 

குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் ராஜூமுருகனின் கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. வட நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வரும் சர்க்கஸ் பெண்ணுக்கும், தமிழ் நாட்டு இளைஞனுக்கும் ஏற்படும் காதலையும், அதனால் வரும் பிரச்னைகளையும் சொல்லும் இப்படத்தில் புதுமுகங்கள் ரங்கராஜ், ஸ்வாதி த்ரிபாதி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார், யுக பாரதி பாடல்களை எழுதியிருக்கிறார், அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan