ஞாபக மறதியா.....? இதோ உங்களுக்கான டிப்ஸ்......!!

share on:
Classic

இன்றைய காலக்கட்டத்தில் நாம் பெரிதும் சந்திக்கும் பிரச்சனை ஞாபக மறதி. இதனால் நாம் அன்றாட வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

ஞாபக மறதி என்பது Dementia என்று கூறுவர் அதாவது மூளையின் செயல் திறன் குறையும் நிலை ஆகும். ஒரே நேரத்தில் பல செயல்களை செய்வதாலும், ஒன்றை மனதுக்குள் சரியாக உள்வாங்காமலோ, மனப் பதட்டத்துடனோ ஒரு வேலையைச் செய்வதாலும் மறதிகள் ஏற்படுகின்றன. ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது மூளை, அந்த மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதில் நினைவிற்கு கொண்டு வர முடியும். சிலர் உடல் எடையை குறைப்பதாக கூறி உணவை குறைத்துக்கொள்வதால் மூளையின் இயக்கத்தை அது குறைப்பது மட்டுமல்லாமல் ஞாபக மறதியையும் ஏற்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க மாவுச்சத்து உள்ள உணவுகளை விட, புரதச் சத்து நிறைந்த உணவுகளை கொடுப்பது நல்லது. ஏனெனில் இந்த வகையான உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியவை. மாவுச் சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் உடலுக்கு மந்த நிலையை ஏற்படுத்தும். பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் தாய் பொழியில் பேசி புரிய வைக்க வேண்டும். படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதி பார்க்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிப்பதோடு மந்த நிலையும் குறைகிறது. 

News Counter: 
100
Loading...

aravind