முடி உதிர்தல் பிரச்சனையா இனி கவலை வேண்டாம்....!!

share on:
Classic

முடி கொட்டுதல் பிரச்சனை மூலம் ஆண்களும் பெண்களும் மனதளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதோடு அன்றாட வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

வழுக்கைத்தலை பிரச்சனைக்கு மரபணுக்கள் காரணமாக இருந்தாலும் அதை சரி செய்வதென்பது இயலாத காரியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்கள் உபயோகிப்பதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க இயற்கை முறையை பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் முடி வளர்வதைக் காணமுடியும். 

என்ன தீர்வு..?

உணவுக்கு பயன்படும் பட்டையில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் இதர உட்பொருட்கள் உள்ளதால் பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஆலீவ் ஆயில் பயன்படுத்துவதால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். இதில் உள்ள எதிர்ப்பு பொருட்கள், தலைமுடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

உபயோகிக்கும் முறை:
ஆலிவ் ஆயிலை சூடேற்றி, பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு உச்சந்தலையில் படும்படி நன்கு  மசாஜ் செய்து 15 நிமிடம் ஊறவைத்து பின்பு நன்கு அலச வேண்டும். இந்த முறையை பயன்படுத்தி வந்தால் தலைமுடி சம்மந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் தீரும்.

மற்றொரு டிப்ஸ்:
சின்னவெங்காயத்தை அரைத்து முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து, ஊற வைத்து 20 நிமிடம் கழித்து குளித்து வர முடி நன்கு வளர்ச்சியடையும். வெங்காயச் சாறு முடி உதிர்தல் மற்றும் புதிய முடி வளர்வதற்கு சிறந்த மருந்தாகும். 

News Counter: 
100
Loading...

aravind