2018ல் முதலிடம் பிடித்த MeToo Hashtag...1.5 மில்லியன் முறை பயன்படுத்தியாக தகவல்...

share on:
Classic

2018 ஆண்டிற்கான இஸ்டாகிராம் செயல்பாடுகளில் #MeToo என்ற ஹேஷ்டேக் 1.5 மில்லியன் முறை அதிகாரப்பூர்வமாக உபயோகிக்கபட்டுள்ளது.

#MeToo இந்த ஆண்டில் இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆனதாகவும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதாகவும் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. முதலில் ஹிந்தி நடிகைகள் இதனை கையில் எடுத்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தங்கள் பெயர்களுடன் பதிவு செய்தனர். நட்சத்திரங்கள் மட்டுமில்லாது பத்திரிக்கையாளர்களும் இந்த இயக்கத்தில் இணைந்தனர். 

சமூக வலையத்தளம் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் குரலாக உள்ளது. இன்ஸ்டாகிராம் சமூக பிரச்சனைகளை அதிக நபர்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

அண்மைக்கால தகவலின்படி,2018 ஆண்டிற்கான இஸ்டாகிராம் செயல்பாடுகளில் #MeToo என்ற ஹேஷ்டேக் 1.5 மில்லியன் முறை அதிகாரப்பூர்வமாக உபயோகிக்கபட்டுள்ளது. இதுபோன்று #timesup (597k முறை) மற்றும்  #marchforourlives (562k முறை) உபயோகப்படுத்தப்பட்டு இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளது.  

அழகுக்காக பயன்படுத்தப்படும் ஹேஷ்டேகுகளான  #love மற்றும் #instagood போன்றவைகளும் இதில் இடம்பெற்றுள்ளனர். #lovequotes அதிகப்படியான பயனாளர்களை கவர்ந்துள்ளது. இந்த ஹேஷ்டேக் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்பட்டு பாசிட்டிவ் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. 

மேலும் #fortnite அதிவிரைவில் உலக அளவில் அதிக பயனாளர்களை கவர்ந்துள்ளது.  "Heart love" அதிகமாக பயன்படுத்தப்பட்ட gif ஆகவும் "heart eyes" அதிகம் பயன்படுத்தப்பட்ட பேஸ் பில்டர் ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

News Counter: 
100
Loading...

sasikanth