ஜனவரி முதல் AG-DMS - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை : மெட்ரோ நிர்வாகம்

share on:
Classic

வரும் ஜனவரி மாதம் ஏஜி டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் பாதை பணி முடிந்து செப்டம்பர் முதல் டீசல் இன்ஜின் இயக்கப்பட்டு சோதனை நடந்து வந்தது.  இப்பாதையில் மின்சார பணிகள் மற்றும் சிக்னல் பணிகள் முடிவடைந்தையொட்டி தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே தற்போது  மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமும், சிக்னல்கள் சோதனையும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது. 

 

சிக்னல் அமைப்புகள் சோதனை மற்றும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தால் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் - சின்னமலை இடையே இன்று முதல் 22-ம் தேதி வரை காலை 6 மணி முதல்,8 மணிவரை மெட்ரோ ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் பயணியருக்கு காலை 6 மணியில் இருந்து 8 மணிவரை சின்னமலை - தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., இடையே இருவழியிலும் டெம்போ பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த சோதனை ஓட்டமானது இம்மாதம் இறுதி வரை நடக்கும், இதனையடுத்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், இப்பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை நடத்தி பயணியர் ரயில் இயக்க சான்றிதழ் வழங்கியபின்,ஜனவரி இறுதிக்குள் பயணியர் ரயில் போக்குவரத்து துவங்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தி வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் பாதை பணி 2019 டிசம்பருக்குள் முடிக்கவும் 2020 மார்ச் மாதத்தில் பயணியர் ரயில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

youtube