மின் இணைப்பு துண்டிப்பால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

share on:
Classic

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு - அசோக் நகர் வரையிலான வழித்தடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை மார்க்கத்தில் இயக்கப்படவேண்டிய மெட்ரோ ரயில் சேவை 6 மணி நேரம் பாதிக்கப்பட்டது. 

ஆனால் தற்போது அசோக் நகர் - கோயம்பேடு இடையே ஒருவழிப்பாதையில் மட்டும் தற்போது மின் இணைப்பு சீராக்கப்பட்டுள்ளதால், அந்த வழித்தடத்திலேயே அனைத்து மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகிறது.  மேலும், அசோக் நகர் - கோயம்பேடு இடையே மற்றொரு வழித்தடத்தில்மின் இணைப்பை சீராக்கும் பணியில் தற்போது ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind