மெட்ரோ நிர்வாகம் வற்புறுத்துகிறது..பெண் ஊழியர்கள் புகார்..!

share on:
Classic

3 ஷிப்ட்களில் பணியாற்ற வேண்டிய சூழலில், 2 ஷிப்ட்களில் பணியாற்ற மெட்ரோ நிர்வாகம் வற்புறுத்துவதாக, தமிழ்நாடு மகளிர் நல ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் பெண் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் அளித்துள்ள மனுவில், 3 ஷிப்ட்களில் பணியாற்ற வேண்டிய சூழலில் இரண்டு ஷிப்ட் ஷிப்டுகளில் பணியாற்ற நிர்வாகம் வற்புறுத்துவதாக கூறியுள்ளனர். மேலும், பணி முடிந்து செல்லும் நேரம் நள்ளிரவு என்றாலும் வாகன வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும் புகாரில் ஊழியர்கள் கூறியுள்ளனர். பொதுமக்களின் நலனுக்காக எந்த நேரத்திலும் பணிக்கு வர தயாராக இருக்கும் தங்களின் பாதுகாப்புக்கு, மெட்ரோ நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பெண் ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind