அமெரிக்க - மெக்சிகோ சுவர் தொடர்பு பேச்சுவார்த்தையின்போது கோபமாக வெளியேறிய ட்ரம்ப்

Classic

அமெரிக்க- மெக்சிகோ எல்லைச் சுவர் விவகாரம் தொடர்பாக குடியரசு கட்சியினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் கோபமாக வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவர் எழுப்ப பிடிவாதம் பிடிக்கும் ட்ரம்ப்:
சட்ட விரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டவேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்காததால், நிதி ஒதுக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

சுவர் கட்டுவதற்கான மசோதாவில் எதிர்க்கட்சிகள் கையெழுத்திடும் வரை மற்ற மசோதக்களில் கையெழுத்திடப் போவதில்லை என்று ட்ரம்ப் கூறிவருகிறார். எனவே அரசுப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதாவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

 

அமெரிக்க அரசு முடங்கியது:
நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் இருப்பதால் அமெரிக்க அரசு பகுதியாக முடங்கியது. உள்நாட்டு விவகாரம், நிதி,சட்டம், வீட்டுவசதி உள்ளிட்ட 9 அரசு துறைகள் முடங்கி உள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,50,000 பேர் தற்காலிகமாக வேலை இழந்துள்ளனர்.

மீதமுள்ளவர்கள்  சம்பளம் இல்லாமல் வேலை செய்து வருகின்றனர். கிரெடிட் கார்டு பில்களை கட்டுவதற்காக அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டி உள்ளதாக பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் வேலையின்மை நலன்களை பெற விண்ணப்பித்துள்ளனர். இந்த வார இறுதி வரைக்கும் இதே நிலை நீடித்தால், அமெரிக்க வரலாற்றிலேயே அதிக நாட்கள் நீடித்த அரசு முடக்கமாக இருக்கும்.

 

கோபமாக வெளியேறிய ட்ரம்ப்:
மெக்சிகோ சுவர் விவகாரத்தில் தீர்வு காண அதிபர் ட்ரம்ப் குடியரசுக் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ட்ரம்ப மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க முடியுமா என்று சபாநாயகர் நான்சி பெலோசியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சபாநாயகர் முடியாது என்று பதிலளிக்கவே அப்படி என்றால் நாம் பேசுவதற்கு இனி எதுவும் இல்லை என்று கூறி உடனடியாக அங்கிருந்து கோபமாக வேளியேறினார் ட்ரம்ப். நாட்டிற்கு எது நல்லதோ அதையே தான் செய்வதாக ட்ரம்ப் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind