எம்எச்-17 பயணிகள் விமான விபத்து : 4 பேர் மீது வழக்கு..!!

share on:
Classic

எம்எச் 17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாம்பூருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜீலை 17-ம் தேதி சென்ற பயணிகள் விமானம் நடுவானில் வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர். இதில் 196 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள் என்றும், 38 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் பக் என்ற ஏவுகணையை ஏவி விமானம் தகர்க்கப்பட்டது தெரியவந்தது.

ஆனால் இது சம்மந்தமாக குற்றவாளிகளை  கண்டுப்பிடிக்க முடியாத நிலை எற்பட்டது. இது தொடர்பாக உக்ரைன் அமைச்சர் அளித்த பேட்டியில் இந்த தாக்குதலில் ரஷ்ய ராணுவ அதிகாரி உட்பட 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.  இது சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிகள் என கருதி ராணுவ அதிகாரி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan