பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் விலகல்..?

share on:
Classic

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் விரைவில் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக உள்ள மிக்கி ஆர்தரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind