3 நாள் சுற்று பயணமாக இந்தியா வரும் மைக் போம்பியோ

share on:
Classic

அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. இதையடுத்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், ஆப்பிள், அவரை உள்ளிட்ட 28 பொருட்களுக்கு இந்தியா இறக்குமதி வரியை அதிகரித்தது. அதேபோல் சமீபத்தில் இந்தியாவில் சிறுபான்மையருக்கு எதிரான மனநிலைகள் அதிகரித்து வருவதாக அமெரிக்கா மதச் சுதந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இந்திய மக்கள் அனைவருக்கும் சமமாக உரிமைகள் வழங்கப்பட்டு இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் மைக் போம்பியோ மூன்றுநாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார். இந்தியா வரும் மைக் போம்பியோ மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் இறக்குமதி வரி உள்ளிட்ட இருநாட்டு உறவுகள் மேம்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind