சென்னையில் நில அதிர்வு, மக்கள் பீதி..

share on:
Classic

சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனை இரவில் உணர்ந்ததாக பலரும் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னைக்கு வட கிழக்கே வங்கக் கடல் பகுதியில் இன்று காலை சரியாக 7:02 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சென்னை தியகராயா நகர் பகுதிகளில் அதிர்வை உனர்ந்ததாக சமூக வலைதளங்களில் தற்போது பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நில அதிர்வினால் எந்த ஒரு பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்ப்படவில்லை. மேலும் இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth