புல்வாமாவில் தீவிரவாத பதுங்கிடம் அழிப்பு.. காவல்துறை தகவல்..

share on:
Classic

காஷ்மீரில் தீவிரவாத பதுங்கிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்துள்ளனர்.

தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்ததில் இருந்த தீவிரவாத பதுங்கிடம் இன்று பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மாண்டவுன் என்ற இடத்தில் காவல்துறை மற்றும் ராணுவம் இணைந்து அந்த இடங்களை அழித்ததாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அங்கிருந்த தீவிரவாதிகள் பயன்படுத்தும் அதிகளவிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பொருட்கள் சட்டவிரோத பொருட்கள் என்றும் அதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோபியான் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று புல்வாமாவில் தீவிரவாத பதுங்கிடம் அழிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya