முதுகுவலியை குணப்படுத்தும் பூண்டு பால்..!!

share on:
Classic

அன்றைய காலத்தில் முதுகுவலி என்பது வயதானவர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால் இப்போது இளம் வயதிலேயே முதுகுவலி வந்து விடுகிறது.

அதிக நேரம் இரு சக்கர வாகனத்தில் செல்வதாலும், கம்பூட்டர் முன்பு அதிக நேரம் உட்கார்ந்திருப்பதாலும் முதுகுவலி ஏற்படுகிறது. கடுமையான முதுகுவலி ஏற்பட்டால் எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாமலும், நிற்கவோ உட்காரவோ முடியாமல் அவதி பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

இதுவே 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால்,முதுகு, கை, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் மிகக் கடுமையான வலி உண்டாகும். முதுகுவலியை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்த முடியும். இந்த முதுகுவலிக்கு சிறந்த தீர்வு பூண்டு பால், இந்த பூண்டு பால் செய்யும் முறையை தற்போது பார்க்கலாம், 

தேவையான பொருட்கள் :

பால் - 300 மில்லி
பூண்டு - 8 முதல் 10 பற்கள்

செய்முறை :

கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து பால் பொங்கி, லேசாக கொதிக்க ஆரம்பித்ததும், தோல் உறித்த பூண்டு பற்களை தோல் உரித்துவிட்டு தட்டி, கொதிக்கும் பாலில் போடவும் மீண்டும் மிதமான தீயிலேயே வைத்து பூண்டு நன்கு வேகும்வரையில் வேக வைத்து பின் இறக்க வேண்டும். 
பூண்டப்பாலை தினமும் அதிகாலையில் அல்லது இரவு உணவுக்குப்பின் குடித்து வர இடுப்பு அல்லது முகுதுவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே செல்வதை உணர முடியும்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan