நமது பால் வெளி அண்டத்துடன் மோத காத்திருக்கும் நட்சத்திர குடும்பம்..தப்பிக்குமா பூமி ..!

share on:
Classic

இன்னும் இரண்டு கோடி ஆண்டுகளில் 'மெகிலனிக்' என்ற பெரிய நட்சத்திர குடும்பம், நமது பால் வெளி அண்டத்துடன் மோதும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுளளது.

நட்சத்திர குடும்பங்கள் 
'மில்கி வே' எந்த மிக பெரிய நட்சத்திர குடும்பத்தில் தான நமது சூரிய குடும்பம் உள்ளது. பால் வெளி அண்டம் என்று தமிழில் அழைக்க படும் 'மில்கி வே' முழுதும் நட்சத்திரங்களும் பல விதமான வாயுகளாலும் நிறைந்தது. அதை சுற்றி பல சிறிய நட்சத்திர குடும்பங்கள் இயங்கி வருகிறது. இந்த நட்சத்திர குடும்பங்களுக்கு மத்தியில் 'பிளாக் ஹோல்' என்ற வெற்றிடம் உள்ளது. இவற்றை நம்மால் பூமியிலிருந்து வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்.

2 கோடி ஆண்டுகளில் மோதும் 
பால் வெளி அண்டத்திற்கு அருகில் உள்ள மற்றோரு நட்சத்திர குடும்பமாகிய 'மெகிலனிக்' என்ற நட்சத்திர குடும்பம் இன்னும் 2 கோடி வருடங்களில் நமது பால் வெளி அண்டத்துடன் மோதும் என்ற அதிர்ச்சியூட்டும்  தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதிரி நட்சத்திர கூட்டத்தில் காணப்படும் dark matter என்ற பொருள் பால் அண்டத்தை விட, மெகிலனிக்கில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. அதிக எடை காரணமாக, வேகமாக சக்தியை இழந்து கொண்டிருக்கும் 'மெகிலனிக்' சீக்கிரமே பால் அண்டத்துடன் மோதும் ஆபத்து அதிகரித்துள்ளது.

மோதினால் என்ன ஆகும் 
அப்படி மோதும் பட்சத்தில் சூரிய குடுமபத்திற்கு பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது என்ற கணிக்கப்பட்டாலும், பால் அண்டத்திலிருந்து கதிர்கள் அதிக அளவில் வெளிப்பட்டும் போது பூமியில் மனித குலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்று தெரிகிறது. "2 கோடி வருடங்கள் என்பது மனிதர்களுக்கு மிக தொலைவில் இருக்கும் காலமாக தோன்றினாலும், விண்வெளி அறிவியலை பொறுத்த வரை இது மிக குறைந்த காலம்" என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 

News Counter: 
100
Loading...

aravind