அதிமுக அரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மினி சட்டமன்ற தேர்தல்..!!

share on:
Classic

இன்று நடைபெற உள்ள 2-ம் கட்ட தேர்தலில் தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

இன்று நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கு இன்றும் 2-ம் கட்டமாக மக்களவைத் தேர்ததல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தமிழகத்தில் 38, புதுச்சேரியில் 1 தொகுதி என 39 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேலூரில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் அதிகளவிலான பணம் சிக்கியதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும் மினிசட்ட மன்ற தேர்தல் என்று கூறப்படும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற உள்ளது. எனவேஅதிமுகவின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் தேர்தலாகவே இது பார்க்கப்படுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தற்போது 22 காலியிடங்கள் உள்ளன. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் பலம் சபாநாயகருடன் சேர்த்து தற்போது 114 -ஆக உள்ளது. தங்கள் பெரும்பான்மையை நீருபிக்க அவர்கள் குறைந்தது 5 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23 நடைபெற உள்ளது. 

News Counter: 
100
Loading...

Ramya