போலீஸாரின் வாகனச்சோதனையில் தப்பி ஓடிய லாரி ஓட்டுநர்..!

share on:
Classic

போலீஸார் மேற்கொண்ட ரோந்து பணியில் மினி லாரி ஒன்றை நிறுத்திய போது ஓட்டுநர் தப்பி ஓடிய சம்பவம் ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆரம்பம் செய்துங்கநல்லூர் என்பதால் அங்கு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரம் என்பதால் எப்போதும் அங்கு போலீஸார் சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திருச்செந்தூர் சாலையில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த மினிலாரியை போலிசார் நிறுத்தினர் தொடர்ந்து லாரியை சோதனை செய்ய முயன்ற போது லாரியின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ஏராளமான மணல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீஸார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan