அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து அறிக்கை தாக்கல்

share on:
Classic

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

ஆர்.கே. நகர், பணம் பட்டுவாடா புகார் தொடர்பான விசாரணையை சிபிஐ'க்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் மற்றும் தலைமை இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2017 ஏப்ரல் 7 ஆம் தேதி விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 4,71,00,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, வருமான வரித்துறை தாக்கல் செய்தது.

அந்த ஆவணங்களை தங்களுக்கும் வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து வரும் 18ம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth