" நீதி போதனை வகுப்புகள் கொண்டு வர முயற்சி"

share on:
Classic

தமிழக அரசு, பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. பணிகள் சிறப்பாக நடக்க, கல்வி அலுவலர்களுக்கு பல அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது தமிழக அரசு மட்டும் தான். சிறந்த கல்வியை தருவதற்கு, ஆசிரியர்கள் உழைத்து வருகிறார்கள். வருகிற ஆண்டில், நீதி போதனை வகுப்புகள் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும். மாலை நேரங்களில் குறைந்தது ஒரு மணி நேரமாவது, விளையாட்டு பயிற்சி, யோகா பயிற்சிகள் கொடுக்கப்படும். +2 முடித்த உடன் வேலை செய்ய உதவும் வகையில், புதிய பாட திட்டங்கள் மற்றும் திறனாய்வு பயிற்சிகள் கொண்டு வரப்படும். இதன் காரணமாக மத்திய அரசின் எந்த பொதுத் தேர்வையும் மாணவர்களால் எதிர்க்கொள்ள முடியும்.

News Counter: 
100
Loading...

vinoth