’மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிப்பு..!!

share on:
Classic

மிஸ்டர்.லோக்கல் படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நடக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடியாக நடித்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்ல நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்  இந்த படத்தை  தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மற்றும் டக்கரு டக்கரு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. மேலும் படத்தை மே 1 ஆம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் இசை வெளியீடு விழா ஏப்ரல் 20 ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan