தமிழை ஒழிக்க மத்திய அரசு முயற்சி : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

share on:
Classic

ரயில்வே துறையில் தொடங்கி, மத்திய அரசு நிறுவனங்கள் வரை தமிழின் பெருமைகளை சிதைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூல் மற்றும் ஒலிநூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. தமிழாற்றுப்படை நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். தமிழாற்றுப்படை ஒலிநூலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட ஓய்வுபெற்ற நீதியரசி விமலா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழின் பெருமைகளை சிதைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, 23-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, மு.க. ஸ்டாலின் தன்னை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்ததை, என்றென்றும் நினைத்திருப்பேன் எனக் கூறினார். கருணாநிதி மறைந்தபோது வெற்றிடம் தோன்றுவதற்கு முன்பே அதை நிரப்பியவர் மு.க.ஸ்டாலின் என வைரமுத்து தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan