தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை : ஸ்டாலின் உறுதி

share on:
Classic

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடைபெற்று ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி, அதில் உயிரிழந்த 13 அப்பாவிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். தி.மு.க அரசு அமைந்ததும் காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீதும், அதற்கு ஆணையிட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் உறுதி அளிப்பதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan