ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க ஸ்டாலின் பிரசாரம்..!

share on:
Classic

ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க ஸ்டாலின் இன்று இரண்டாம் கட்ட பரப்புரையைத் தொடங்கினார்.

அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகைய்யாவை ஆதரித்து மு.க ஸ்டாலின் இன்று ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட ராமச்சந்திராபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை அடுத்து தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும் வாகனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

News Counter: 
100
Loading...

aravind