நியூட்ரினோ அனுமதிக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்...!

share on:
Classic

நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வேளையில், மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளதாக மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அணுசக்தித்துறை அனுமதி வழங்கியுள்ளது, தமிழக மக்களுக்கும் குறிப்பாக தேனிப் பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேனி மாவட்டம் பொட்டி புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை, தமிழக மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தேனித் தொகுதியிலிருந்து துணை முதலமைச்சராகியுள்ள ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இத்திட்டத்தை கைவிடச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan