'ஊழல்வாதிகளை காக்கும் அரசு எடப்பாடி அரசு' - ஸ்டாலின் ட்வீட்

share on:
Classic

ஊழல்வாதிகளையும், ஊழலுக்குத் துணை போகிறவர்களையும் 'காக்கும் அரசாக எடப்பாடி அரசு உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், ஒரே நாளில் அதிமுக அரசுக்கு இரு பெரும் தலைகுனிவு சம்பவங்கள் நடந்துள்ளது என்று கூறியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மூன்றாண்டுகள் சிறை மற்றும் உயர்கல்வித் துறைச் செயலாளரை  கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஊழல்வாதிகளையும், ஊழலுக்குத் துணை போகிறவர்களையும் 'காக்கும் அரசு எடப்பாடி அரசு' என்பதற்கு இதுவே சான்று என்றும் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind