பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டது ஏன்..? மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்டதன் மூலம், உச்சநீதிமன்ற அறிவுரையை தமிழக அரசு மீறிவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் கருத்து பதிவிட்டுள்ள முக.ஸ்டாலின், பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுரையை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், உச்சநீதிமன்றத்தின் அறிவுரையையும் மீறி அதிமுக அரசு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண்ணின் பெயரை குற்றப்பத்திரிக்கையில் பதிவிட்டு வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இனி யாரும் புகார் கொடுக்கக்கூடாது என அதிமுக அரசு மிரட்டுகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக அரசு கபடநாடகம் ஆடுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sajeev