தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளில் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு..!

share on:
Classic

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

டுமீல் குப்பத்தில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதவி மேனியாவும், தினகரனுக்கு பதவி மற்றும் பண மேனியாவும் இருப்பதாக கடுமையாக சாடினார். தொடர்ந்து பேசிய அவர் இந்து மதம் குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட கமல் ஹாசன் ஒரு வரலாற்று ஆசிரியர் என்றும் கிண்டலடித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan