தண்ணீர் பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை தேவை : ஸ்டாலின் வலியுறுத்தல்

share on:
Classic

சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்காமல், தமிழக அமைச்சர்கள், கட்சிக் கூட்டங்களையும் நடத்திக் கொண்டும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டும், அலட்சியமாகவும், ஆணவத்துடனும் இருப்பதாக குற்றம்சாட்டினார். சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை மக்கள் மட்டுமின்றி, மற்ற மாவட்ட மக்களும் குடிநீருக்கு அலையும் கொடுமைக்கு உள்ளாட்சித்துறையே காரணம் என சுட்டிக்காட்டினார். இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

News Counter: 
100
Loading...

Ragavan