பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க ஸ்டாலின் மரியாதை..!

share on:
Classic

திராவிட தலைவர்கள் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் திமுக வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டி. ஆர் பாலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டிற்குச் சென்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகனிடம் வாழ்த்து பெற்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind