மாநில அரசின் நிர்வாகம் நிலைகுலைந்திருக்கிறது - ஸ்டாலின்

share on:
Classic

உயர்கல்வித்துறை செயலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மாவை உயர்நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டிருக்கும் நிலையில், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர்  வேடிக்கை பார்ப்பதும், ஆளுநர் பொறுமை காப்பது அரசியல் சட்டம் பலவீனமடைந்திருப்பதை காட்டுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். 

மாநில அரசின் நிர்வாகம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு நிலைகுலைந்திருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், இதனை சரிசெய்ய ஆளுநர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind