முகநூல் நேரலையில் போதைப்பொருள் வாங்கிய MLA

share on:
Classic

பஞ்சாப் மாநில எம்.எல்.ஏ. ஒருவர் முகநூல் நேரலையில் இருந்து கொண்டே போதைப்பொருள் வாங்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

கடந்த வாரம் பஞ்சாப்பில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, இங்குள்ள மிகப்பெரும் பிரச்னையான போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை ஒழித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனை பொய்யாக்கும் முயற்சியில் லோக் இன்சாப் கட்சியைச் சேர்ந்த சிமார்ஜித் சிங் பைன்ஸ் (Simarjit Singh Bains) என்ற எம்.எல்.ஏ. ஈடுபட்டுள்ளார். 

அதற்காக லூதியானாவில் உள்ள போதைப்பொருள் கும்பலிடம், முகநூல் நேரலையில் இருந்து கொண்டே ஹேராயின் பாக்கெட்டுகளை வாங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், லூதியானாவில் உருளைக்கிழக்குகளைப் போல் சுலபமாக போதைப்பொருட்கள் கிடைப்பதாகவும், இதனை தடுக்காமல் காவல்துறையினர், கடத்தல்காரர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும்  குற்றம்சாட்டியுள்ளார்.

News Counter: 
100
Loading...

sajeev