அமேசான் மொபைலுடன் அலெக்ஸா...!

share on:
Classic

அமேசான் ஸ்மார்ட்ஃபோன் தோல்வியடைந்த பிறகு,மொபைல் துறையில் மீண்டும் ஒரு புதிய வழியை கண்டறிந்துள்ளது. 
 
வர்த்தகத்தில் தோல்வியே காணாத அமேசான் நிறுவனம் வரலாற்றில் முதன் முறையாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. அமேசான், மொபைல் துறையில் மீண்டெழ பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. ஸ்பிரிண்ட் விற்பனை செய்யும் வயர்லெஸ் செல்போன் சேவையான பூஸ்ட் மொபைலை அமேசான் வாங்கவுள்ளது. மேலும் அமேரிக்காவில் உள்ள டி-மொபைல்ஸ் உடன் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அலெக்ஸாவை முக்கிய சேவையாக கொண்ட மொபைல் போன்களை வழங்க அமேசான் திட்டமிட்டு வருகிறது. அலெக்ஸா ஸ்மார்ட் அசிஸ்டண்ட்டை நுகர்வோருக்கு குறைந்த விலை சாதனங்கள் மற்றும் திட்டங்களாக கொடுப்பதன் மூலம் வியாபாரத்தை வலுவூட்டவுள்ளது அமேசான். நுகர்வோர்கள் அலெக்ஸாவை WiFi நெட்வொர்க் உள்ள இடங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வயர்லெஸ் இணைப்பு உள்ளமைக்கப்பட்டுள்ள மொபைலை தயாரித்து வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் இந்த மொபைலை WiFi நெட்வொர்க் மற்றும் ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.              

News Counter: 
100
Loading...

udhaya