ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு...!

share on:
Classic

மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' (TRAI), மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி (MNP) விதிகளில் 3 முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 

மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி:
ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் மீது சில நேரங்களில் அதிருப்தி உண்டாகும். சிக்னல் கிடைக்காமை, பேசுவது சரியாக புரியாமை மற்றும் அதிகப்படியான விலை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த அதிருப்தியானது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும். அந்த நேரங்களில், தற்போது பயன்படுத்தி வரும் தொலைபேசி எண்ணை மாற்றாமலேயே, சேவை வழங்கி வரும் குறிப்பிட்ட நிறுவனத்தை மாற்றி, வேறு தொலைதொடர்பு நிறுவனத்தின் சேவையை பெறுவதற்கு 'மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி' (MNP) என்று பெயர். இந்த வசதியில் தான் வாடிக்கையாளர்களின் நலன் கருதி டிராய் தனது முதலாவது விதி மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. 

விதி மாற்றம் 1:
'தனிப்பட்ட போர்ட்டிங் குறியீடு' எனப்படும் யுனீக் போர்ட்டிங் கோட்-ன் (UPC) வேலிடிட்டி 15 நாட்களிலிருந்து 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மொபைல் போர்ட்டிங் வசதியை இன்னும் எளிமையானதாக மாற்றவே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக டிராய் தெரிவித்துள்ளது. ஆனால், இத்திருத்தத்திற்கு ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விதி மாற்றம் 2:
முன்பை விட இப்போது மிகவும் வேகமாக போர்ட்டிங் கோரிக்கையை வாடிக்கையாளர்கள் முன்வைக்க ஏதுவாக 'குறுஞ்செய்தி' அனுப்புதலிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

விதி மாற்றம் 3:
கார்ப்பரேட் போர்ட்டிங்கை பொறுத்தவரை, ஒரே ஒரு 'அனுமதிக்கப்பட்ட நிறுவன  கடிதத்தை' கொண்டு இதுவரை 50 எண்களை மட்டுமே அதிகபட்சமாக பெற்றுக்கொள்ளக் கூடிய சூழல் இருந்தது. இந்த விதியிலும் தற்போது மாற்றம் செய்யப்பட்டு, ஒரு அனுமதிக்கப்பட்ட கடிதத்தை வைத்து 100 எண்கள் வரை கார்ப்பரேட் நிறுவனம் பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. 

 

News Counter: 
100
Loading...

mayakumar