நியூஸிலாந்தில் கொடூரத் தாக்குதல்..மோடி கடும் கண்டனம்..!

share on:
Classic

நியூசிலாந்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகக் கூறியுள்ளார். கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் பூரண நலம்பெற இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அனைத்து விதத்திலும் தீவிரவாதத்தை  வெளிப்படுத்துபவர்கள் மற்றும் வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sajeev