டைம் நாளிதழின் பிரதமர் குறித்த சர்ச்சை கட்டுரை : எழுத்தாளர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று மோடி புதிய விளக்கம்..!!

share on:
Classic

டைம் நாளிதழில் வெளியான மோடி குறித்து வெளியான சர்ச்சைக்குரிய கட்டுரைக்கு மோடி பதிலளித்துள்ளார். 

அமெரிக்காவின் டைம் நாளிதழின் அட்டைப்படத்தில் பிரதமரின் புகைப்படத்துடன், இந்தியாவின் பிரிவினைவாதி தலைமை பொறுப்பில் உள்ளார் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை ஆதிஷ் தஸீர் என்ற கட்டுரையாளர் எழுதியிருந்தார். மேலும் 5 ஆண்டு இந்தியா மோடியின் ஆட்சியை சகித்து கொள்ளுமா என்ற கேள்வியும் அந்த கட்டுரையில் அவர் எழுப்பியிருந்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத பிரிந்துள்ளது என்றும், இனவாத தாக்குதல்கள் மோடியின் ஆட்சிக்காலத்தில் அதிகரித்துள்ளாதகவும் ஆதீஷ் குறிப்பிட்டிருந்தார். 

யோகி ஆதித்யநாத்தை உத்திரப்பிரதேச முதல்வராக நியமித்தது, மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தின் குற்றவாளியான பிரக்யா சிங் தாகூர் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டது ஆகியவற்றையும் சுட்டிகாட்டியது. மேலும் காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலில் இருந்து வெளிவர வேண்டும் எனவும், ராகுல்காந்தியை கற்றுக்கொள்ள முடியாத சாதாரண நபர் என்று விமர்சித்திருந்தது. மோடியின் உண்மையான முகம் வெளிவந்துள்ள என்று இதனை எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கொண்டன. 

இந்நிலையில் டைம் நாளிதழ் வெளிநாட்டை சேர்ந்தது எனவும், பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்த எழுத்தாளர் இதனை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவரது நம்பகத்தன்மைக்கு இந்த கட்டுரையே போதும் எனவும் பதிலளித்துள்ளார். டைம் நாளிதழின் மோடி குறித்த கட்டுரை மோடியின் மீது அவதூறு பரப்பும் முயற்சி என்று தெரிவித்துள்ள பாஜக, எழுத்தாளர் ஆதிஷ் தஸீர் பாகிஸ்தானின் செய்தியாளரின் மகன் என்பதால் அவர் அந்நாட்டின் கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

Ramya