படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி

share on:
Classic

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், பாஜகவின் வெற்றிக்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க அகமதாபாத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது என்றும், அரசுக்கான கடமை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து, பிரதமராக பதவியேற்கவுள்ளதையொட்டி, குஜராத் மாநிலம் காந்திநகர் சென்ற நரேந்திரமோடி, தனது தாயார் ஹீராபென் மோடி இல்லத்திற்கு சென்று, அவரிடம் ஆசிபெற்றார்.

News Counter: 
100
Loading...

Ragavan