மோடி ஆட்சியில் 2017-18-ல் மட்டும் 14,000 விவசாயிகள் தற்கொலை - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

share on:
Classic

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 2017-18-ல் மட்டும் 14,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று வெளிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வந்த மோடி, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட மூன்று மாநிலங்களிலும் அக்கட்சி தோல்வி அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடன் தொல்லையால் மோடி ஆட்சியில் 2017-18-ல் மட்டும் 14,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும், சராசரியாக ஒரு நாளைக்கு 35 விவசாயிகள் தற்கொலைக்கு செய்யும் அவலம் நடைபெற்று வருவதாகவும் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார். எனவே விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாய அமைப்புக்களை ஒருங்கிணைத்து கடுமையான போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னெடுத்து செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

News Counter: 
100
Loading...

Ramya