புதிய மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் மோடி.!

share on:
Classic

திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். 

இதற்காக பொதுக்கூட்ட மேடை அருகே மற்றொரு மேடை அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையிலான புதிய மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் அவர் தொடங்கி வைக்கிறார். அதே போல், ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதை தொடர்ந்து பரமக்குடி- தனுஷ்கோடி இடையேயான 4 வழிப்பாதை, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை ஆகியவற்றுக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

News Counter: 
100
Loading...

vinoth